வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (13:41 IST)

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

cm stalin
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 488 பேரூராட்சிகள் உள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள்,  ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 
நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.