ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:58 IST)

குறை சொல்வதை விட இறங்கி வேலை செய்யலாம்! – சென்னை வெள்ளம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Kamalhassan
சென்னை வெள்ளம் குறித்து அரசை குறை கூறுவதைவிட இறங்கி வேலை செய்வதே முக்கியம் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.



வங்க கடலில் உருவான மிச்சம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் வடியாத நிலையில் நிவாரண பொருட்கள் பாடல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் சரியான ஏற்பாடுகள் இல்லை என்று பலரும் அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் “மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான் தற்போதைய தேவையே தவிர அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் ஒருகோடி பேருக்கும் சென்று சேர்வது சாத்தியமற்றது. எதிர்காலத்தில் இவ்வாறான மழை பாதிப்புகள் இல்லாதபடிக்கு வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளநீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K