ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (17:44 IST)

குடும்பத்தை மீட்டு, வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

chennai flood
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டெலிவரி ஊழியரின் உடல் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னை புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை தக்க சமயத்தில் பேரிடர் மீட்பு படையினரும், போலீஸாரும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டெலிவரி ஊழியரின் உடல் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் கடந்த 4 ஆம் தேதி  நிவாரண முகாமில் சிக்கியிருந்த  தன் தந்தையை பார்த்து விட்டு வரும்போது பெருவெள்ளத்தில் சிக்கி டெலிவரி ஊழியர் முருகன்(30) உயிரிழந்தார். தொலைதொடர்பு சேவை இல்லாததால் அவரின்  நிலை குறித்து தகவல் தெரியாமலே இருந்துள்ளனர். இந்த நிலையில்  3 நாட்களுக்குப் பிறகு அவரது இன்று மீட்கப்பட்டது.

அதேபோல் சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளத்தில் சிக்கிய தன் தந்தை, தாய், தங்கையை மீட்ட அருள் உயிரிழந்தார். அவரது உடலும் 3 நாட்களுக்குப் பிறகு வெள்ள நீரில் மிதந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.