திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (10:03 IST)

துடிதுடித்துப் போன லதா ரஜினிகாந்த்: போயஸ் கார்டனில் இன்று முக்கிய நிகழ்வு

சிறுமி ஹரினியை அவரது குடும்பத்தாருடன் லதா ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் இன்று சந்திக்க உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன்  - காளியம்மா இவர்களுக்கு 2 வயதில் ஹரினி என்ற மகள் இருந்தார். இரு மாதங்களுக்கு முன்பு ஹரினி காணாமல் போய் விட்டார்.
 
இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை மீட்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கு சமூக வலைதளங்களில் அனைவரும் ஆதரவு அளித்தனர். பலர் சிறுமியை மும்மரமாக தேடி வந்தனர்.
 
சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த லதா ரஜினிகாந்த், ஹிரினியை போல ஒரு சிறுமி மும்பை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும் சீக்கிரமாகவே ஹரினி கிடைப்பார் எனவும் ஆறுதல் கூறினார். இதையடுத்து போலீஸார் மும்பைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு ஹரினி கிடைக்கவில்லை. இதனால் ஹரினியின் பெற்றோர் மனவேதனையில் இருந்தனர்.
இந்நிலையில் போலீஸார் திருப்போரூரில் வைத்து சிறுமியை மீட்டனர். சிறுமியை 5 லட்சத்திற்கு விற்ற நபரை போலீஸார் கைது செய்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
லதா ரஜினிகாந்த், மீட்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.