செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (19:57 IST)

துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் ஜே.கே.ரித்தீஷ் திடீர் சந்திப்பு

நேற்று முதல் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டு போடுவதும் அதை விஷால் உடைக்க முயற்சிப்பதும் அதன்பின் கைது நடவடிக்கைகளும் கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வகையில் நேற்று இயக்குனர் பாரதிராஜா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் ஜே.கே.ரித்தீஷ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டில் அவரை சந்தித்தார். தயாரிப்பாளர் சங்க பிரச்சினை தொடர்பாக துணை முதலமைச்சருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.