திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (16:55 IST)

சசிகலா கொடுத்த பூஸ்ட்: அதிமுகவினரை கூட்டணிக்கு அழைக்கும் தினகரன்

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
 
தனது பேட்டியில், என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறது. அமமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. 
 
ஒரு சிலர் அமமுகவை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும்தான் வீணாக வதந்திகலை பரப்பி வருகிறது. 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால்தான் பார்க்க வந்தோம். 
 
என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. தினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. அது எல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். 
 
அதிமுகவினர் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம். வர வேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.