1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (14:17 IST)

நிலானிக்கு தொடர் டார்ச்சர் கொடுத்த லலித்குமார் - வெளியான ஆடியோ

தற்கொலை செய்து கொண்ட காந்தி என்கிற லலித்குமார் சீரியல் நடிகை நிலானியை தொடர் சித்தரவதை செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

 
சென்னை கே.கே. நகரில் லலித்குமார் என்கிற வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள, அதற்கு நடிகை நிலானியே காரணம் என செய்திகள் தீவிரமாக பரவியது. மேலும், லலித்குமாரும், நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல் செய்திகள் வெளியாகின.
 
ஆனால், நேற்று நிலானி அளித்த பேட்டியின் மூலம், அது உண்மையில்லை என்பது தெரிய வந்தது. தன்னுடன் நட்பாக பழகிய லலித்குமாரை ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், ஆனால், அவர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது தெரிந்ததும், அவரை விட்டு விலகியதாகவும் நிலானி கூறினார். அதேபோல், நிலானிக்கு லலித்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
 
இந்நிலையில், நிலானியின் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி அவரிடம் பேசி லலித்குமார் மன உளைச்சல் கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நிலானியிடம் அவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நிலானியை லலித்குமார் மிரட்டி, கண்ணீருடன் நிலானி அவருடன் கதறுகிறார். 

 
நீ ஒவ்வொரு முறை என் காலிங் பெல்லை அழுத்தும்போதும் நான் என் கையை பிளாடால் கீறிக்கொள்வேன் என நிலானி கதறுகிறார். ஆனால், அவரை ஈவு இரக்கமில்லாமல் லலித்குமார் மிரட்டுகிறார். எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் கொடு நான் வருகிறேன் என தொடர்ந்து மிரட்ட, நிலானி கொடுத்த புகாரை விசாரிக்க ஒரு காவல் அதிகாரி தொடர்புக்கு வர, அவருடனும், லலித்குமார் சண்டை போடுகிறார். 
 
மொத்தத்தில், நிலானியுடம் பழகி அவரின் மனதை மாற்றி திருமணம் செய்யும் முடிவில் லலித்குமார் இருந்ததும், அவரை பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டு நிலானி விலக முடிவெடுத்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து மன உளைச்சலை லலித்குமார் ஏற்படுத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.