வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (16:59 IST)

அவன் ஒரு பொம்பளை பொறுக்கி - நடிகை நிலானி கண்ணீர் பேட்டி

காந்தி என்கிற லலித்குமார் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் என்பது தெரிந்ததால் அவரை விட்டு விலகியதாக நடிகை நிலானி கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

 
சமீபத்தில் காந்தி என்கிற லலித்குமார் சென்னை கே.கே.நகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது சீரியல் நடிகை நிலானி புகார் கொடுக்க, காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
 
அந்நிலையில், லலித்குமாரும், நிலானியும் ஒன்றாக இருந்த சில  புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  அதேபோல், நிலானி தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் பரவியது.
 
இந்நிலையில், இன்று காலை கமிஷனர் அலுவகம் வந்த நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் ‘எனது காதலர் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நான் இருந்தேன். ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துக்கொண்டே இருந்தார். எனவே அவரை விட்டு விலகுவது என முடிவெடுத்தேன். சமூக வலைத்தளங்களில் நானும் காந்தியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பரப்பி என் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நிலானி “நான் எங்கும் தலைமறைவாக  இல்லை. நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னிடம் கார் கூட கிடையாது. கணவர் மற்றும் பெற்றோர் இல்லாமல் நான் தனிமையில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு லலித்குமார் சிறு சிறு உதவிகள் செய்து வந்தார். என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக எடுத்த சில புகைப்படங்களை என்னுடைய முகநூலில் திருட்டுத்தனமாக பதிவிட்டு அவரை நான் காதலிப்பதாக கூறுவது போல் ஒரு பதிவை இட்டார். அது பலருக்கும் பரவி விட்டது. எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.
 
ஆனால், அவர் மோசடி பேர்வழி என்பதும், பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி பணத்தை பறித்தவன் என்பது எனக்கு தெரியவந்தது. எனவே, அவனை விட்டு விலகினேன். ஆனால், தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தான். இது தொடர்பாக 2016ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் அவனை எச்சரித்தனர். 
 
அது நடந்து ஆறு மாதம் கழித்து என்னுடைய வீட்டில் அனுமதியின்றி நுழைந்து எனக்கு தாலி கட்ட முயற்சி செய்தான். இதற்கு என் குழந்தைகளே சாட்சி. தனலட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றி ஒன்றரை லட்சம் பணம் பறித்தான். அவனிடம் ஏமாந்துவிட்டதாக தனலட்சுமி என்னை தொடர்பு கொண்டு கூறி அழுதார். இது அவனின் குடும்பத்தினருக்கும் தெரியும். அவன் மோசமானவன். அவனை விட்டு விலகிவிடு என அவர்களே என்னிடம் கூறினர்.
 
இந்நிலையில், தற்போது மீண்டும் வந்து என்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி தொந்தரவு கொடுத்தான். எனவே, நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவன் தற்கொலை செய்து கொண்டான். அவனின் நண்பர் ஜான் என்பவனுக்கு அவனை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியும்” என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.