ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:56 IST)

போலீஸை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்: சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பெண் துணை இயக்குனர் ஒருவர் போலீஸ் எட்டி உதைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் நேற்று இரவு திருவான்மியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலையில் வேகமாக வந்த கார் ஒன்றில் பெண் துணை இயக்குனர் காமினி என்பவரும் அவரது நண்பரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது
 
இதனையடுத்து அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது பெண் துணை இயக்குநர் காமினி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் அவர் போலீசாரை தள்ளிவிட்டதொடு  காலால் எட்டி உதைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது 
 
இதையடுத்து அந்த பெண் இயக்குனர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு ஊழியரை செயல்படவிடாமல் தடுத்தது, குடி போதையில் ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது 
 
மேலும் விசாரணையில் அவருடன் வந்த ஆண் நண்பர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதும் தெரியவந்துள்ளது. பெண் துணை இயக்குனர் ஒருவர் போலீசாரை எட்டி உதைத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது