இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால்... முதலில் தேமுதிக களமிறங்கும் - பிரேமலதா விஜயகாந்த்
இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால்... முதலில் தேமுதிக களமிறங்கும் - பிரேமலதா விஜயகாந்த்
கடந்த வருடம் இறுதியில் சிஏஏ என்ற இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக அப்போது முதலே எதிர்க்கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் போராடி வருகின்றனர். சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது.
தற்போதுவரை 30 க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் இறந்துள்ளனர். வன்முறையைத் தூண்டும்படி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,நேற்று டெல்லி போலீஸார் தற்போது வன்முறையைத் தூண்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க முடியாது என பதில் அளித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், சிஏஏ நாட்டின் பாதுக்காப்புக்காகத் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் விளக்க வேண்டும்; இஸ்லாமியர்களுக்கு சிஏஏவால் எதாவது பாதிப்பு என்றால் தேமுதிக முதல் ஆளாக களமிறங்கும் என தெரிவித்துள்ளார்.