1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK Minsiter Rajendra Balaji supports Rajinikanth

ரஜினி சொன்னது கரெக்ட்: பாஜகவை எதிர்க்கிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

அதிமுக
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
ரஜினிகாந்த் சமீபத்தில், எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் ஆரம்பத்திலேயே இந்த கலவரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கலாம் என்றும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும் கூறினார்.
 
மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவ்வாறு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கலவரத்தை கடுமையான சட்டம் போட்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென ரஜினி கூறியிருப்பது நியாயமான கருத்து. 
 
அதிமுக, பாஜக மற்றும் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரும் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. அனைத்து மதத்தினரும் கைகோர்த்து செல்ல வேண்டுமென நினைக்கிறோம். கலவரத்தை தூண்டி விடுவோரை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 
 
டெல்லியில் கலவரம் நடக்கும்போது, அதை தூண்டிய தலைவர்கள் யாரும் அங்கு இல்லை. டிரம்ப் வரும்போது பாஜகவினர் கலவரத்தை தூண்டுவார்களா? எங்கு கலவரம் நடந்தாலும், ஆர்எஸ்எஸ், சங்பரிவார் தான் காரணம் என கூறுவது தவறு என தெரிவித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு! – ஒத்துக்கொள்வாரா தாக்கரே?