1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 3 மே 2021 (18:35 IST)

ஸ்டாலின், உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து!

ஸ்டாலின், உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உள்பட பல முக்கிய பிரபலங்கள் தங்களுடைய தொகுதிகள் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்களில் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள் 
 
ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் சூரி ஸ்டாலின் மற்றும் உதயநிதியை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது