1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 மே 2021 (17:13 IST)

ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்

ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இதையடுத்து அவர் முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.