வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (17:11 IST)

ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன கமல் பட இயக்குனர்!

கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மே 7 ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலின் விக்ரம் பட இயக்குனர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ அற்புதமான வெற்றிக்கு மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். உங்களிடம் இருந்து அனைவருக்கும் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.