திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (10:57 IST)

சசிக்கலாவின் நோக்கத்தை நாம் நிறைவேற்றுவோம்! – எல்.முருகன் பதில்!

சசிக்கலா அரசியலில் இருந்து விலகுவதை வரவேற்றுள்ள பாஜக எல்.முருகன், சசிக்கலாவின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – அமமுக மீண்டும் இணைக்கப்படுமா என பேசப்பட்டு வந்த நிலையில் சசிக்கலா தனது அரசியல் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சசிக்கலாவின் முடிவை வரவேற்பதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “சசிக்கலாவின் ஓய்வுக்கான காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் நமது பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதே பிரதான நோக்கம் என்ற அவரது நோக்கத்தை செயல்படுத்த நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயன்றவர்களுக்கு சசிக்கலா பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.