திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (10:48 IST)

துப்பாக்கிகளை ஒப்படையுங்க.. விடுமுறை கிடையாது! – போலீஸுக்கு உத்தரவு!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களிடம் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 2700 பேர் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். அதில் 600 பேர் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் முடிந்ததும் துப்பாக்கிகள் திரும்ப அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை அவசர தேவைகள் தவிர்த்து விடுமுறை எடுக்க போலீசாருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.