புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (08:03 IST)

தேர்தல் சம்மந்தமாக தினகரனுக்கு சசிகலா இட்ட உத்தரவு? சம்மதிப்பாரா?

அமமுக பொதுச் செயலாளர் சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

நேற்று இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சசிகலா தினகரனையும் தேர்தலில் நிற்க வேண்டாம் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கு டிடிவி தினகரன் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அமமுகவின் மையப்பொருள் சசிகலா இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.