1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (17:10 IST)

2024 தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெல்லும்: மீண்டும் பிரதமர் மோடி தான்: அமைச்சர் எல்.முருகன்

2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் மீண்டும் பிரதமர் மோடி தான் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 
 
கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்தார். 
 
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது ஒரு ஜோக்கர் கூட்டம் என்று விமர்சித்த அவர் அந்த கூட்டம் விரைவில் சிதறிவிடும் என்று தெரிவித்தார். 
 
தார்மீக அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Mahendran