ஒரு லட்சம் முக கவசம் வழங்கிய பாஜக!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (10:03 IST)
பாஜக சார்பில் ஒரு லட்சம் முக கவசம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. 

 
சென்னை தலைமை செயலகத்தில் பாஜக சார்பில் சுமார் ஒரு லட்சம் முக கவசம் மற்றும் ஆக்சிஸன் செறிவூட்டும் இயந்திரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜிகே நாகராஜ், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் மட்டும் 45 லட்சம் தடுப்பூசிகள் வரும் எனவும் இன்று 6 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 
 
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற மத்திய அரசு தமிழகத்திற்கு உதவும் என தெரிவித்தார். தொற்று தடுப்பு பணிகள் பாஜக தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :