1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. L Murugan banner damage in Tharapuram

நன்றி தெரிவித்து பேனர் வைத்த எல்.முருகன்! – கிழித்தெறிந்த மர்ம ஆசாமிகள்!

Tamilnadu
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் நன்றி தெரிவித்து வைத்த பேனரை மர்ம நபர்கள் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் 1,393 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

எனினும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே எல்.முருகன் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை இரவோடு இரவாக மர்ம நபர்கள் சிலர் கிழித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
குழந்தை பிறக்கும் முன்னே.. திருமணம் நடக்கும் பின்னே! – பிரதமருக்கு கெட்டிமேளம்!