1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (23:43 IST)

நீதிக்காக போராடிய டிராபிக் ராமசாமிக்கு என் அஞ்சலி - கமல்ஹாசன்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை வெளியான தகவலின்படி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ,அவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டிராபிக் ராமசாமி ஆளும் கட்சிகளை எதிர்த்து பல பொதுநல வழக்குகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டிராபிக் ராமசாமிக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அதில், அநீதிகளை துணிச்சலாக எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் மூலம் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நீதிக்காக அயராது போராடிய டிராபிக் ராமசாமிக்கு என் அஞ்சலிகள் எனத் தெரிவித்துள்ளார்.