செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (10:32 IST)

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... குற்றாலத்தில் 28 ஆண்டுகள் இல்லாத நிகழ்வு !!

28 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. 
 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் என 67-க்கும் அதிகமான நீர்நிலைகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவில் தண்ணீர் செம்மண் நிறத்தில் பாதுகாப்பு வளைவு மற்றும் தடாகத்தை தாண்டி பாலம் வரை கொட்டுகிறது. இது கடந்த 28 வருடங்களில் இல்லாத நிகழ்வாகும்.