துணை முதல்வர் வேட்பாளரா குஷ்பு? பரபரப்பு தகவல்

kushboo
துணை முதல்வர் வேட்பாளரா குஷ்பு? பரபரப்பு தகவல்
siva| Last Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (18:59 IST)
நடிகை குஷ்பு இன்று மதியம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக தான் பாடுபடுவேன் என்று கூறினார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு என்ன பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பாஜக வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. ஏற்கனவே பாஜகவில் நான்கைந்து துணை தலைவர்கள் இருப்பதால் இன்னொரு துணைத் தலைவர் பதவியை குஷ்பு ஏற்க மாட்டார் என்றே கருதப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு முதல்வர் பதவி என்றும், பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி என பேரம் பேசப்படும் என்றும் அதில் உடன்படிக்கை ஏற்பட்டால் துணை முதல்வர் வேட்பாளராக குஷ்பு அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது

அது மட்டுமின்றி தமிழக பாஜக தலைவர்
எல்.முருகன் அவர்களுக்கு தேசிய அளவில் பதவி கொடுத்து விட்டு தமிழக பாஜக தலைவராக குஷ்புவை நியமனம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் எச்.ராஜா உள்ளிட்ட பழம்பெரும் பாஜக தலைவர்கள் எந்த பதவியும் இல்லாமல் இருக்கும்போது இன்று வந்த குஷ்புவுக்கு பெரிய பதவியா என்ற புகைச்சல் இருந்து வருவதாகவும் இதனால் பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :