ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (18:53 IST)

’மாநாடு’ தயாரிப்பாளருக்கு குஷ்பு மேல் அப்படி என்ன கோபம்? காரசாரமான டுவீட்!

’மாநாடு’ தயாரிப்பாளருக்கு குஷ்பு மேல் அப்படி என்ன கோபம்?
இன்று காலை முதல் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தவர் நடிகை குஷ்பு என்பதும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அவரும் மதியம் பாஜகவில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் குஷ்புவின் பெயரைச் சொல்லாமல் சினிமாக்காரர்கள் சினிமாவுக்கு எதுவுமே செய்யாமல் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்று அரசியலுக்கு செல்கிறார்கள் என்றும் சினிமாவும் இவர்கள் எதுவும் செய்யாத நிலையில் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க?