வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (21:15 IST)

தடுப்பூசி போட்டவரகளுக்கு மட்டும் ரேசன் பொருட்கள்: குஷ்பு சர்ச்சை டுவிட்

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என நடிகை குஷ்பு டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணியை அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பு ஊசி போட்டுவிட்டு வந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டுமென்ற இது மாதிரி செய்தால் அனைவரும் தடுப்பூசியை போட்டு விடுவார்கள் என்றும் குஷ்பு டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்த டுவிட் சர்ச்சையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது