வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (09:49 IST)

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தண்டனை: மணிப்பூர் கொடூரம் குறித்து குஷ்பு டுவிட்..!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை இன்னொரு பிரிவினர் நிர்வாணமாக அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த கொடூர சம்பவத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்  குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று டுவிட் செய்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை விளைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு நேர்ந்தால் கொடுமையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சில ஆண்கள் எந்த அளவுக்கு மனித தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது என்றும் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva