1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (09:22 IST)

என் பெண் தோழியோடு போய் உங்க படத்த பாத்தேன்… குஷ்புவிடம் சீக்ரெட் பகிர்ந்த விஜய்!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். விஜய் பேசும்போது படத்தில் நடித்துள்ள குஷ்பு பற்றி தன்னுடைய மலரும் நினைவுகளைப் பேசினார்.

அப்போது “குஷ்பு அவர்களைப் பார்த்தால் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சின்னத்தம்பி படத்தை கமலா தியேட்டரில் என்னுடைய கேர்ள் பிரண்ட்டோடு சென்று பார்த்த நியாபகம் வருகிறது.” எனக் கூறியுள்ளார்.

அந்த பெண் தோழியின் பெயர் என்னவென்று கேட்டபோது விஜய் அதை சொல்ல மறுத்துவிட்டார்.