செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (13:36 IST)

பாஜகவில் இணையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் சேர போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்புவை அடுத்து மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக இருக்கும் அப்சரா ரெட்டியும் காங்கிரஸிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  பாஜகவில் சேர போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவல் ஊதி பெரிதாக்க விரும்பாமல் இத்தகவலை உடனடியாக மறுத்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.