செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (11:08 IST)

ரத்தம் கொதிக்குது!!! உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும்: கொந்தளித்த குஷ்பு

பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு தயவு தாட்சனை பார்க்காமல் உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகை குஷ்பு டிவீட் செய்துள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அயோக்கியன் திருநாவுக்கரசு என்பவன் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டான்.
 
இது நாடெங்கிலும் இருந்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரத்தை செய்த யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. கருணை காட்டாமல் அவன்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.