திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (13:14 IST)

இம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு பரபரப்பு டுவிட், சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு!

இந்திய ராணுவ விமானி அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.


 
அத்துடன் அவர் தனது டுவிட்டில்  இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சமூக வலைதளங்களில் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
 
ஏற்கனவே புல்வாமா போரில் பாஜக அரசியல் ஆதாயம் தேடி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியையைச் சேர்ந்த குஷ்பு இப்படி டுவிட் போட்டது மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவை மோடிக்கு ஆதரவாக டுவிட் போட்டு வரும் நபர்கள், குஷ்பு இம்ரான்கானின் செய்தி தொடர்பாளர் போல் பேசி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியலுக்கு மோடியை இகழ்ந்து நாட்டை விமர்சிப்பது சரியல்ல என்றும் குஷ்புவை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
 
 
குஷ்பு வெளியிட்ட இன்னொரு ட்வீட்டில், "விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே.. நீங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.