1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kuppan is the admk candidate against seeman

ஸ்டாலினை எதிர்ப்பேன் என்ற சீமான், குப்பனை எதிர்க்கின்றாரா?

சீமான்
வரும் சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் கடந்த சில வாரங்களுக்கு முன் முழங்கினார். ஆனால் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியான போது அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது 
 
முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிய்ல் தான் மீண்டும் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஸ்டாலினை எதிர்க்காமல் திருவொற்றியூரில் போட்டியிடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வந்திருக்கும் நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் குப்பன் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் என்பதும் அந்த பகுதியில் அதிமுக நிர்வாகி ஆக தற்போது இருந்து வருகிறார் என்பதும் உள்ளூர் மக்களின் பேராதரவை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவரையும் மீறி சீமான் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
About Writer
siva