வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (11:44 IST)

காலவரையின்றி மூடப்படும் கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி.. என்ன காரணம்?

கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்லூரியில் எம்.ஏ தமிழ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் ஜாதி ரீதியாக பேசியதாகக் கூறி, கடந்த 6 நாட்களாக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் முடிவுக்கு வராததால் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதனால் தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் படித்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
இந்த கல்லூரியில் முதுகலை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரியும் பேராசிரியை முதுகலை தமிழ்த்துறை  மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுத்து கொண்டிருந்தபோது அவரை சாதி ரீதியாக பேசிய்டஹி கண்டித்து போராட்டம் நடத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் கடிதம் கொடுத்த நிலையில், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran