வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (14:31 IST)

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!

Sarath Pawar
மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத் பவார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  
 
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இரு சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், பத்லாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். 
 
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 17ம் தேதி பத்லாபூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்த மகாராஷ்டிர அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்வத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் புனேவில் இன்று போராட்டம் நடைபெற்றது.


கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் கருப்புத் துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது என்று சரத் பவார்  தெரிவித்தார்.