செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (12:30 IST)

அண்ணாமலை புளுகுக்கு அவ்ளோதான் வேல்யூ! – கே.எஸ்.அழகிரி கிண்டல்!

alagiri
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியாக செய்யப்படவில்லை என அண்ணாமலை கூறியது குறித்து கே.எஸ்.அழகிரி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறை இருந்ததாக சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து பதிலளித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக அரசு பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாக அண்ணாமலை பொய்யான தகவலை கூறி வருகிறார்.

அவ்வாறான எந்த கடிதமும் வரவில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுத்துள்ளார். மோடி வந்த சென்று 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திடீர் ஞானோதயத்தால் ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார் அளிக்கிறார். கெட்டிக்காரன் புளுகு 8 நாட்கள் என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை” என பேசியுள்ளார்.

Edited By Prasanth.K