1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Metriculation school directorate order

அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தக்கூடாது: அதிரடி உத்தரவு

matriculation
அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தக்கூடாது: அதிரடி உத்தரவு
தனியார் பள்ளிகளில் ஜாதி மதம் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் ஜாதி மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஜாதி மதம் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் முகாம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்: நாளை செயற்கைக்கொள் செலுத்துவதால் பிரார்த்தனை