தொடர்புடைய செய்திகள்
- பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சசிகலா
- பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து;4 பேர் பலி - டிடிவி.தினகரன் இரங்கல்
- விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
- அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்ற கரூர் பொதுமக்கள்..!
- வெடி விபத்தே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!
பட்டாசு குடோன் வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு..! முதல்வர் நிவாரண தொகை அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிர் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Edited by Mahendran
