1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (20:49 IST)

ரெட் லைட் ஏரியாவாக மாறி வருகிறதா கோயம்பேடு.. அம்மா வயதுடைய பெண்களுடன் இளைஞர்கள் பேரம்..!

சென்னை கோயம்பேடு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ரெட் லைட் ஏரியாவாக மாறி வருவதாகவும் இளைஞர்கள் பலர் இரவு நேரத்தில் பைக்கில் வந்து அம்மா வயது உள்ள பெண்களிடம் பேரம் பேசி வருவதாகவும் தனியார் ஊடகம் ஒன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே கோயம்பேடு பகுதியில் விபச்சாரம் அதிகம் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தனியார் ஊடகம் ஒன்று இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 18 முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் அம்மா வயதில் உள்ள பெண்களிடம் பேரம் பேசும் காட்சிகள் உள்ளதை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறிய போது இரவு நேரத்தில் அதிக இளைஞர்கள் வருகை தருவதாகவும் பைக்கில் வந்து விபச்சாரத்திற்கு தயாராக உள்ள பெண்களிடம் பேரம் பேசுவதாகவும் இதை அரசு தான் தடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 
 
இளைஞர்கள் இதனால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அம்மா வயது பாட்டி வயதுள்ள பெண்களிடம் இளைஞர்கள் பேரம் பேசுவதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva