Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, எடப்பாடியை கிண்டல் செய்து பாடல் - பாடகர் கோவன் மீண்டும் கைது

Updated: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (14:01 IST)
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கிண்டலடித்து பாடல் பாடியதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நாட்டுப்புற கலைஞரான கோவன் சமூக அக்கறை கொண்டவர். அதை தனது பாடல்களில் பிரதிபலித்து வருகிறார். குறிப்பாக, மாநில, மத்திய அரசுகளை விமர்சித்து அவர் இயற்றி பாடியுள்ள பாடல் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவை.
 
ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடல் வீடியோ வெளியிட்டதற்காக 2015ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்நிலையில், தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு ரத யாத்திரை நடத்தப்பட்டது. அதைக் கண்டித்து கோவன் ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கோவன் விமர்சித்துள்ளார். 
 
இதைத் தொடர்ந்து திருச்சி போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.

எல்லாம் காட்டு

ஸ்டாலினை மிசா டைம்ல கைது பண்ணாங்க!. மிசாவில் இல்லை!.. துரை வைகோ பேட்டி...

விரைவில் டோல்கேட்டே இல்லாதே இந்தியா!.. நிதின் கட்காரி சொன்ன குட்நியூஸ்!..

லண்டன் நகரில் முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு.. நாளை குலுங்க போகுது சில்வர்ஸ்டன் மைதானம்...

ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்.. புதினுக்கு பரிசாக கொடுத்த மோடி...

முக்கிய அதிகாரி இடமாற்றம்... யார் தப்பு செஞ்சாலும் நடவடிக்கை தான்.. ஏன்னா இது தவெகவின் தூய ஆட்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments