பெண் பயணியிடம் சில்மிஷம்: சிக்கிய திமுக பிரமுகர்

Last Updated: வியாழன், 28 மார்ச் 2019 (14:18 IST)
ரயில் பயணத்தின் போது திமுக பிரமுகர் ஒருவர் சக பெண் பயணியின் மீது கலை போட்டும், தவறுதலாக நடந்துக்கொண்டதாகவும் வந்த புகாரின் பெயரில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் நேற்று இரவு சூலூர் திமுக அலுவலக கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது அந்த கூட்டத்திலேயே சந்திரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடபெற்ற திமுக நேர்காணலில் கலந்துக்கொண்டு வீடு திரும்பிய போது ரயிலில் சக பெண் பயணி மீது அவரின் கால் தவறுதலாக பட்டுவிட்டதாக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணிடம் சந்திரன் தவறாக நடந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக அந்த பெண் கூச்சல் போட்டதும், வேரு ஒரு சக பயணி ரயில் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் ஒருவழியாக சந்திரன் அந்த விவகராத்தை அப்போதே ரயில்வே போலீஸாரிடம் பேசி முடித்துவிட்டு கிளம்பியுள்ளார். 
 
ஆனால், சந்திரன் மீது சென்னையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள என கூறி சூலூர் திமுக அலுவலக கூட்டத்தில் இருக்கும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் சந்திரன் மீது வழக்கு தொடர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. 
 
தேர்தல் நேரத்தில் திமுக பிரமுகர் மீது இப்படி ஒரு வழக்கு பதிவாக கைது செய்யப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :