திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (08:23 IST)

திமுக பிரமுகர் திடீர் கைது: போலீஸ் நிலையம் முன் குவிந்த தொண்டர்கள்

திமுக பிரமுகர் திடீர் கைது
அதிமுக அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக பிரமுகர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அமைச்சர் வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கோவை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கௌதம் என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அமைச்சர் வேலுமணி குறித்து முருகன் அவதூறாகப் பேசியது உண்மை என கண்டறிந்தனர் 
 
இதனையடுத்து முருகன் திடீரென கைது செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த திமுகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு முருகன் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அந்த பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இருப்பினும் கைது செய்யப்பட்ட முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திமுக பிரமுகர் முருகன் கைதுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது