1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (11:37 IST)

ஹிஹிஹி... ஊரடங்கு பார்த்து பயந்த கொரோனா? குறையும் எண்ணிக்கை!

கடந்த 10 நாட்களுக்கு பின் சென்னையில் 1000க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது
 
நேற்று தமிழகத்தில் 1,515 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,515 பேர்களில் 919 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 10 நாட்களுக்கு பின் சென்னையில் 1000க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை - 4,370; தேனாம்பேட்டை - 4,143; கோடம்பாக்கம் - 3,648; அண்ணாநகர் - 3,431; திரு.வி.க நகர் - 3,041; அடையாறு - 1,931; வளசரவாக்கம் - 1,444; திருவொற்றியூர் - 1,258, அம்பத்தூர் - 1,190 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

முன்பை விட தற்போது பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் நாளை மறு நாள் முதல் அமலுக்கு வரும் 4 மாவட்டங்களின் முழு ஊரடங்கால் இன்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.