தொடர்புடைய செய்திகள்
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..!
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு.. யாருக்கு வெற்றி..!
- விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு..! வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!
- ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வாக்களிக்க வந்த பெண்ணிற்கு கத்திக்குத்து.. பெரும் பரபரப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணிற்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றது அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்று கூறப்படும் நிலையில் தப்பியோட முயன்ற அவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் நிலையில் ஒரு வாக்கு சாவடியில் மட்டும் திடீரென பெண்ணுக்கு கத்துக்குத்து சம்பவம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த கத்துக்குத்து சம்பவத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் குடும்ப தகராறு காரணமாகவே ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் காரணமாக அந்த வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
