1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2024 (19:20 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

udhayanidhi
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி இன்று பிரச்சாரம் செய்தார். 
 
மக்களுக்கான ஆட்சியில் மகத்தான சாதனைகள் படைத்து வரும் நம் திராவிட மாடல் ஆட்சிக்கும் வலுசேர்க்கும் விதமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணன் அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து விக்கிரவாண்டி திருவாமத்தூர் பகுதியில் இன்று அவர் வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்,
 
கடந்த 3 ஆண்டுகளில் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தொகுதிக்கு செய்த சாதனைகளை எடுத்துக் கூறி திருவாமத்தூர் பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தோம் என்றும், கழக அரசின் சாதனைகள் தொடர்ந்திட ஆதரிப்போம் உதய சூரியன் என்று உறுதியளித்த திருவாமத்தூர் மக்களுக்கு என் அன்பும், நன்றியும் என்றும் அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் தெரிவித்தார். மேலும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் பின்வருமாறு:
 
முண்டியம்பாக்கம் முதல் கொசப்பாளையம், ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும்
 
வாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும்
 
புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்
 
ரூ.62 கோடி மதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்
 
Edited by Siva