செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (12:07 IST)

காந்தியின் கொள்ளுப்பேரனா ? … ஒழுக்கமற்ற கமல் – தமிழிசை ஆவேசம் !

நடிகர் கமலஹாசன் வாக்குகளுக்கான மதவிஷத்தைப் பரப்புவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறியுள்ளார்.

இதையடுத்து கமலின் இந்த பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ‘ காந்தியின் கொலையை இப்போது நினைவுக் கூறும் கமல்ஹாசன் இலங்கைக் குண்டுவெடிப்பு குறித்து பேசாதது ஏன் ?.. அவருடைய திரைப்படம் மத அடிப்படைவாதிகளால் தடைபட்ட போது  நாட்டை விட்டு வெளியேறுவேன் சொன்னவர், இப்போது உன்மையான இந்தியன் என சொல்வது ஏன். காந்தியின் கொள்ளுப்பேரன் என சொல்லிக்கொள்கிறார் கமல். ஆனால் தன் வாழ்க்கையில் காந்தி கடைபிடித்த ஒழுக்கத்தை கொஞ்சம் கூட கடைபிடிக்காதவர் கமல். புதிய அரசியலைக் கடைபிடிப்பதாக சொல்லும் கமல் பழையதை மீண்டும் கிளறுகிறார். இது ஆபத்தானது. இந்து தீவிரவாதம் என கமல் பேசுவதை கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.