வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (15:34 IST)

அபிநந்தன் பணியிடமாற்றம் – ஸ்ரீநகரில் இருந்து ராஜஸ்தான் !

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இப்போது ஸ்ரீநகரில் இருந்து ராஜஸ்தான் விமானத் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, ஓய்வில் இருந்தார் அபிநந்தன். இதையடுத்து சிறிய ஓய்வுக்குப் பிறகு ஸ்ரீநகரில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஸ்ரீநகரில் இருந்து மீண்டும் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் இந்த பணியிட மாற்றத்துக்கான காரணங்கள் தெரியவில்லை.