வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (09:11 IST)

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்.. டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே!

கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக இது அமைய உள்ளது. புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதற்காக  ரயில்வே துறையும் தமிழக அரசும் இணைந்து திட்டம் தீட்டி வந்த நிலையில் தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு  நடை மேம்பாலம் அமைக்க இருப்பதாகவும், அதாவது சென்னை தி.நகரில் மாம்பலம் ரயில் நிலையத்திற்கும் தி.நகர் பேருந்து நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளது போல கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு இடையே நடைமேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

Edited by Mahendran