குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி… சிறுவன் மயக்கம்!

mahendran| Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:47 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மயங்கியுள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள அனுமந்த பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் தினேஷ். இவருக்கு ப்ரதீப் என்ற 12 வயது மகன் உள்ளார். ப்ரதீப் இன்று காலை அருகில் உள்ள கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார். அந்த குளிர்பானத்தின் அடியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கிவிழுந்துள்ளான்.

இதையடுத்து சிறுவன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மேலும் படிக்கவும் :