வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:43 IST)

அவமானப் பட்டதாக உணர்கிறேன்… பதவி விலகிய பின் அம்ரீந்தர் சிங் பேச்சு!

அவமானப் பட்டதாக உணர்கிறேன்… பதவி விலகிய பின் அம்ரீந்தர் சிங் பேச்சு!
பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது கட்சியில் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக எம் எல் ஏக்களை திரட்டி வருகிறாராம் சித்து. இந்நிலையில் கட்சியில் தனக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக ஆளுநரை சந்தித்த அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கட்சிக்குள் நான் மிகவும் அவமானப்படுத்தப் படுவதாக உணர்கிறேன். அவர்களுக்கு யார் மேல் நம்பிக்கை உள்ளதோ அவர்களை முதல்வராக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.