ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:51 IST)

அது ஒரு மேஜிக்… மக்கள் அதை செய்ய வேண்டும்- நடிகை வேண்டுகோள்!

நடிகை ரம்யா நம்பீசன் தான் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் கலந்துகொண்டார்.

தமிழில் பீட்சா மற்றும் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து குறிப்பிடத்தக்க நடிகையாக இருப்பவர் ரம்யா நம்பீசன். இவர் இப்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியை தாண்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் மட்டும் இல்லாமல் எல்லா படத்தையுமே திரையரங்கில் மக்கள் பார்க்க வேண்டும். அது ஒரு மேஜிக். அந்த சுவாரஸ்யம் வேறு எதிலும் கிடைக்காது. இந்த படத்தை வெளியிட ஓடிடி நிறுவனங்கள் முன்வந்த போதும், தயாரிப்பாளர் தியேட்டரில்தான் வெளியிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டார்’ எனப் பேசியுள்ளார்.