ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:06 IST)

நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி.! கைது செய்யப்படுவாரா.?

நடிகை ரேகா நாயர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் உள்பட சில படங்களில் நடித்த ரேகா நாயர். அந்த படத்தில் மேலாடை இல்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தைரியமாக கூறி வந்தார் என்பதும் குறிப்பாக பயில்வான் ரங்கநாதனிடம் நடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மதுபோதையில் ஒருவர் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய நிலையில் அந்த பக்கமாக வந்த ரேகா நாயரின் கார் அந்த நபரின் மீது மோதியதாகவும் அதில் அவர் பலியானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில் அந்த காரில் ரேகா இருந்தாரா? உண்மையில் காரை ஓட்டியது யார்?   என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Edited by Siva